அந்த ஹீரோயின் படுத்திய பாடு கொஞ்சமா நஞ்சமா: புலம்பும் தயாரிப்பாளர்

|

சென்னை: மலையாளத்தில் பல வகை மதுவை மிக்ஸிங் செய்தால் வரும் பெயர் கொண்ட படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடித்த நாடோடிகள் நடிகை படுத்திய பாடு பற்றி தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாடோடிகள் நடிகை மலையாள படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடித்தார். அ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் அந்த மூன்று எழுத்து படம் அண்மையில் வெளியானது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரின் மகனும் நடித்திருந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளரின் மகன் நடிகையை பற்றி கூறுகையில்,

நாங்கள் எல்லாம் காலை 8 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்தால் அந்த நடிகை 11 மணிக்கு சாவகாசமாக வருவார். அண்ணா சாலையில் இருக்கும் 5 நட்சத்திர ஹோட்டலில் தான் தங்குவேன் என்பார். அவரது கணவருக்கும் சேர்த்து நாங்கள் செலவு செய்தோம். நடிகைக்கு தமிழில் மார்க்கெட் இல்லாதபோதிலும் அவருக்கு ரூ. 22 லட்சம் சம்பளம் கொடுத்தோம்.

இந்நிலையில் நான் இந்த படத்தில் நடிக்க என் கணவருடன் வெளிநாடு செல்ல எடுத்திருந்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டேன் என்று கூறி ரூ.2.5 லட்சம் வாங்கிக் கொண்டார். நடிகையால் தினமும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை எங்களுக்கு நஷ்டம். படம் ரிலீஸாவதற்கு முன்பு இதை எல்லாம் கூற வேண்டாம் என்று தான் இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தோம் என்றார்.

ஆனால் நடிகையின் தரப்போ இதை எல்லாம் மறுத்துள்ளது.

 

Post a Comment