சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரம் தொடர்பாக ரசிகர்கள் சண்டை போடுவதை தடுக்க அஜீத்தும், விஜய்யும் சேர்ந்து பேட்டி அளிக்க முடிவு செய்துள்ளார்களாம்.
ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வதை விரும்பாதவர்கள் அஜீத்தும், விஜய்யும். இந்நிலையில் பிரபல வார பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று மெகா கருத்துக்கணிப்பை நடத்தி அதில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவித்தது.
இதையடுத்து அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டனர். இந்நிலையில் கருத்துக்கணிப்பில் உண்மையில் வெற்றி பெற்றது அஜீத் தான் என்று செய்திகள் வெளியாகின. இதை பார்த்து விஜய் ரசிகர்கள் கோபம் அடைந்து திட்டித் தீர்க்கத் துவங்கினர்.
இப்படி தங்கள் ரசிகர்கள் சண்டை போடுவதை பார்த்த அஜீத்தும், விஜய்யும் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அதாவது கூட்டாக சேர்ந்து பேட்டி அளிக்கப் போகிறார்களாம். நாங்கள் இருவரும் நண்பர்களாக இருக்கையில் எங்கள் ரசிகர்களாகிய நீங்கள் அடித்துக் கொள்ளலாமா, நீங்களும் எங்களைப் போன்று நட்பாக இருங்கள் என்று அன்பாக கேட்டுக் கொள்ளப் போகிறார்களாம்.
அவர்கள் விரைவில் இந்த பேட்டியை அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
+ comments + 2 comments
vijay vetripetraal naagal enjoy panninaal enna thappu?
POI POLAPPA PARU YA ....
Post a Comment