அஞ்சலிக்கு கல்யாணம் ஆகிடுச்சா...?

|

சென்னை: சிலகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அஞ்சலி தற்போது மீண்டும் சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் தமிழ் படமொன்றில் நடித்து வருகிறார்.

சித்தியின் கொடுமை எனப் பிரச்சினையை ஆரம்பித்த அஞ்சலி கடந்தாண்டு திடீர் என காணாமல் போனார். மீண்டும் நடிக்கலாம் என திட்டமிட்ட அஞ்சலிக்கு, இயக்குநர் களஞ்சியத்தின் படத்தை முடித்துக் கொடுத்தால் தான் புதிய பட வாய்ப்பு என தடங்கல் உண்டானது.

ஆனால், அனைத்துப் பிரச்சினைகளையும் சட்டரீதியாக பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் நடிக்க வந்து விட்டார் அஞ்சலி.

அஞ்சலிக்கு கல்யாணம் ஆகிடுச்சா...?

படப்பிடிப்பிற்கு இடையே, அஞ்சலி தன்னைக் குறித்து வெளியான செய்திகளுக்கு விளக்கமளித்துள்ளார். முதலாவதாக தனக்கு அமெரிக்காவில் ரகசிய திருமணம் நடந்ததாக வெளியான செய்திக்கு அவர் மறுப்புத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆனந்த விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-

ஏகப்பட்ட பிரண்ட்ஸ்...

தமிழ், தெலுங்கு, கன்னடம்னு கிட்டத்தட்ட தென்னிந்திய மொழி எல்லாத்துலயும் நடிச்சுட்டு இருக்கேன். அத்தனை மொழி சினிமாவிலும் எனக்கு ஏகப்பட்ட பிரண்ட்ஸ் இருக்காங்க.

ரகசிய திருமணமா...

அப்படி இருக்கிறப்ப, ரகசியமா கல்யாணம் பண்ற அளவுக்கு எனக்கு என்ன தேவை?

பிரச்சினைகள் உண்மை தான்...

ஆனா, நான் கொஞ்சம் பிரச்சினைல இருந்தேன்ங்கிறது மட்டும் உண்மை. அதுல இருந்து இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வெளில வந்துட்டு இருக்கேன்' எனத் தெரிவித்தார்.

உடம்பு சரியில்லையா...?

தொடர்ந்து ‘அஞ்சலிக்கு உடல் நலம் சரியில்லை' என வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, நீங்களே பார்க்கிறீங்களே... உங்க முன்னாடி தானே உக்காந்துருக்கேன்.

நீங்களே சொல்லுங்க...

ஆரோக்கியமாத் தானே இருக்கேன், ஒரு சீன் நடிச்சுட்டு வந்து தானே உங்க கூடப் பேசிட்டு இருக்கேன், உடம்பு முடியலைனா நடிக்க முடியுமா?

வதந்தி...

பிடிக்காதவங்க ஆயிரத்தெட்டு விஷயம் பரப்புவாங்க. அவங்களுக்கு வேற வேலை இல்லை. அதுக்கெல்லாம் நாம பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா?

நடக்கப் போறத பத்தி மட்டும்....

அதான் நல்லபடியா வந்துட்டேன்ல இனி நடக்கப் போறதைப் பத்தி மட்டும் பேசுவோம்' என பதிலளித்தார் அஞ்சலி.

களஞ்சியம் படம்...

தனது சினிமா மறுபிரவேசம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அஞ்சலி களஞ்சியம் படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கு, ‘அவரோட படத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னது தான் பிரச்சினை, இப்ப அது கோர்ட்ல இருக்கு. அதைப் பத்தி பேச வேணாமே' என வாய் திறக்க மறுத்துள்ளார்.

 

Post a Comment