சினிமாக்காரர்களின் மேடைப் பேச்சையும் நடத்தையையும் பார்த்தால், பல நேரங்களில் இது செட்டப்போ என்றுதான் தோன்றும். சினிமாவில் கூட பார்க்க முடியாத அத்தனை உலக மகா நடிப்பை மேடைகளில் பார்க்கலாம்.
நேற்று கூட அப்படி ஒரு 'சீன்' சத்யம் திரையரங்கில் அரங்கேறியது, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது.
படத்துக்குப் பெயர் கடவுள் பாதி மிருகம் பாதி. பெங்களூரில் போரடித்தால் அவ்வப்போது கோடம்பாக்கம் பக்கம் வந்து 'நானும் இருக்கிறேன்' என அட்டென்டன்ஸ் போடும் பூஜா கவுரவ வேடத்தில் நடித்த படம் இது (என்னமோ இவர்தான் படத்தின் வெற்றியையே தீர்மானிப்பவர் மாதிரி பில்டப் வேறு!).
இந்தப் படத்தை இயக்கி, நடித்திருக்கும் பெங்களூர்க்காரரான ராஜ்தான் படத்தின் தயாரிப்பாளரும்.
இந்த ராஜ் வேறு யாருமில்லை.. பூஜாவின் முன்னாள் ஒருதலைக் காதலராம். அவரது காதலை மறுத்துவிட்ட பூஜா, நட்பை மட்டும் தொடர்கிறாராம். இதனை விழா மேடையிலும் சொன்ன பூஜா, அந்த நட்புக்காகவே இந்தப் படத்தில் நடித்துள்ளதாகக் கூறினார்.
"இந்த ராஜ் தங்கமான மனசுக்காரன். இவனது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்," என்ற பூஜா, ' ராஜ், நமக்குள் ஒன்றும் இல்லைதானே?' என்ற கேட்டபோது, "இப்போதும் நான் உனக்காகக் காத்திருக்கிறேன்,"என்றார் ராஜ் (அடங்கெப்பா.. இந்த நடிப்பையெல்லாம் சினிமாவில் காட்டுங்கப்பா.. சகிச்சிக்கிட்டு பார்க்கவாவது முடியும்!).
அடுத்து ராஜ் பேச வந்த ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். உடனே குறுக்கே வந்த பூஜா, "ஏன்டா.. இப்படி கை கால் எல்லாம் ஆடுது. மடத்தனமா பேசுறே... டான்ஸ் ஆடாதே. நேரா நின்னு பேசுடா.. ஒழுங்காக முதலில் வந்தவர்களை வரவேற்று விட்டுப் பேசு..அதுவும் தமிழில் பேசு..." என்று ஏகப்பட்ட அடாபுடாக்களை அள்ளி வீசி விழாவுக்கு வந்தவர்களை நெளிய வைத்தார்.
Post a Comment