சென்னை: நல்ல வில்லன் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த கடல்ராணி நடிகை வேர்ல்டு ஹீரோவை பார்த்ததும் பயத்தில் மயங்கிவிட்டாராம்.
வேர்ல்டு ஹீரோ தனது நண்பரின் இயக்கத்தில் வில்லன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வேர்ல்டு ஹீரோ விஸ்வரூபம் எடுத்த படத்தில் நடித்த 2 நாயகிகள் உள்ளனர். அவர்கள் தவிர சுள்ளானின் கடல் ராணி நடிகையும் உள்ளார்.
கடல் ராணி நடிப்பில் அசத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் வில்லன் படப்பிடிப்பில் நடிகை முதன்முதலாக ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது வேர்ல்டு ஹீரோ அங்கு வந்துள்ளார். அவரை பார்த்த நடிகைக்கு பயத்தில் கை, கால் எல்லாம் நடுங்கி மயங்கி விழுந்துவிட்டாராம்.
இதை பார்த்த வேர்ல்டு ஹீரோ பதறிப்போய் ஓடி வந்து நடிகைக்கு மயக்கத்தை தெளிய வைத்துள்ளார். என்னை பார்த்து பயப்படாதீர்கள், தைரியமாக நடிக்க வேண்டும் என்று வேல்ர்டு ஹீரோ தைரியம் சொல்லி நடிகையை தேற்றியுள்ளார்.
அதன் பிறகு தான் கடல் ராணிக்கு பயம் தெளிந்ததாம்.
Post a Comment