ஓவர் அலப்பறை பண்ணும் ஊதா கலரு ரிப்பன்: பல்லைக் கடிக்கும் தயாரிப்பாளர்கள்

|

சென்னை: ஊதா கலரு ரிப்பன் பண்ணும் அலப்பறையை தாங்க முடியாமல் தயாரிப்பாளர்கள் முடியை பிச்சுக்கிறார்களாம்.

சங்கம் படத்தின் மூலம் பிரபலமானவர் ஊதா கலரு ரிப்பன். அவர் இளம் இசையமைப்பாளருடன் சேர்ந்து எழுதும் கருவி பெயர் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஆனால் சங்கம் படத்தை அடுத்து அவர் நடிப்பில் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை. ஆனால் நடிகை பண்ணும் அலம்பலுக்கு மட்டும் அளவே இல்லையாம். நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் அவர் ஸ்டார் ஹோட்டல்களில் மட்டும் தான் தங்குவாராம். அதுவும் தனியாக இல்லை அம்மா மற்றும் துக்கடாக்களுடன் தான் தங்குவாராம்.

சென்னையில் உள்ள ஒவ்வொரு ஸ்டார் ஹோட்டல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார். ஹோட்டலில் அவரின் அதிகாரம் தூள் பறக்குமாம். சர்வர் அவர் கொடுத்த குரலுக்கு வரவில்லை என்றால் உடனே ஹோட்டலை மாத்துங்க என்பாராம்.

அவரையும், அவருடன் வருபவர்களையும் அதிக செலவில் ஸ்டார் ஹோட்டல்களில் தங்க வைத்தால் இப்படி எதாவது குறை கூறி ஹோட்டலை மாற்றிக் கொண்டே இருக்கிறாராம். ஒத்த படம் ஓடியதற்குள் இத்தனை அலப்பறையா என்று பலர் கூறுகிறார்களாம்.

தயாரிப்பாளர்களோ அம்மணி வைக்கும் செலவால் தலை முடியை பிச்சிக்கிறாங்களாம்.

 

Post a Comment