பாலியல் தொல்லை: நடிகை இஷா கோபிகரின் கணவர் மீது நடிகை பூஜா மிஸ்ரா புகார்

|

மும்பை: சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை இஷா கோபிகரின் கணவர் டிம்மி நரங், அவரது சகோதர் மீது பாலிவுட் நடிகையும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் நடித்தவருமான பூஜா மிஸ்ரா புகார் அளித்துள்ளார்

பாலியல் தொல்லை: நடிகை இஷா கோபிகரின் கணவர் மீது நடிகை பூஜா மிஸ்ரா புகார்

இது குறித்து மும்பை மத்வா போலீஸ் நிலையத்தில் நடிகை பூஜா மிஸ்ரா அளித்துள்ள புகாரில், தொழில் அதிபரும் நடிகை இஷா கோபிகரின் கணருமான ரோகித் நரங், மற்றும் அவரது சகோதரர் ராகுல் நரங் ஆகியோர் தன்னை புனேவில் ஒரு தனிமையான இடத்தில் காரில் வைத்து தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி உள்ளார்.

மேலும் அவர்கள் தனக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறினார்கள். கடந்த ஒருவருடமாக இருவரும் மிரட்டி வருகின்றனர். இரண்டு முறை பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அவர்கள் என்னை கொலை செய்யவும் முயன்றனர். கடந்த காலங்களில் அவர்கள் என்னை ஹிப்னாடிசம் செய்தனர். எனது மொபைல் போன் மற்றும்,சமூக இணைய தளங்களின் கணக்குகளை அழித்து விட்டனர் என்றும் கூறி உள்ளார்.

இது குறித்து மித்வா போலீசார் கடந்த ஜூன் 19 ந்தேதி இரு சகோதரர்கள் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

 

Post a Comment