சிம்புவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்த அஜீத்

|

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் அவருடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறாராம் சிம்பு.

சிம்பு தான் அஜீத்தின் தீவிர ரசிகன் என்று கூறி வருகிறார். அவருக்கு அஜீத்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்நிலையில் அவர் கௌதம் மேனனை அணுகி அஜீத் படத்தில் தனக்கு நடிக்க ஒரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுள்ளார்.

சிம்புவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்த அஜீத்

இது அஜீத்துக்கு தெரியவர அவர் கௌதமிடம் சிம்பு என்னுடன் நடிக்க நீண்ட காலமாக ஆசைப்படுகிறார் இந்த படத்தில் நடிக்க வைக்கலாமே என்று தெரிவித்தாராம். அதற்கு கௌதமும் சரி என்று கூறியிருக்கிறார்.

படத்தில் சிம்புவுக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லையாம். அதனால் ஒரு பாடலில் அஜீத்துடன் சேர்ந்து ஆட வைக்கப் போகிறார்களாம். இதன் மூலம் சிம்புவின் நீண்ட கால ஆசை நிறைவேறியுள்ளது.

அண்மை காலமாக சிம்பு விஜய்யுடனும் நெருக்கம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment