சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தன்னுடைய தேனிலவுக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலர் ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது கணவருடன் தேனிலவை கொண்டாட அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தென் அமெரிக்க நகரங்கள் மற்றும் கனடாவில் பிரமாண்ட இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இதற்காக தமிழ், தெலுங்கு நட்சத்திரங்கள், பாடகர் பாடகிகளை அழைத்துச் செல்கிறார். இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க திவ்யதர்ஷினி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த மாதமும் அடுத்த மாதமும் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லும்போதே தன் கணவருடன் அங்கு தேனிலவும் முடித்து விட்டு திரும்ப முடிவு செய்திருக்கிறார் டிடி.
Post a Comment