சென்னை: தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்துடன் சிம்புவின் வாலு பட ட்ரெய்லரை வெளியிடுகிறார்கள்.
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி வரும் 18ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் ரிலீஸாகும் தினம் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல சிம்பு ரசிகர்களுக்கும் குஷியான தினம். ஏன் என்றால் வேலையில்லா பட்டதாரி படத்தின் இடையே சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள வாலு படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார்கள்.
சிம்புவும், தனுஷும் நண்பர்களாகிவிட்டதால் இந்த செய்தியை பார்த்து பலரும் வியக்க மாட்டார்கள்.
ட்ரெய்லர் குறித்து வாலு படத்தின் எடிட்டர் சுரேஷ் கூறுகையில்,
ட்ரெய்லரில் வசனங்கள் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். ரசிகர்களுக்கு அது நிச்சயம் பிடிக்கும். ட்ரெய்லரில் ஆக்ஷனும் உண்டு. அதனால் ரசிகர்கள் ட்ரீட்டை எதிர்பார்க்கலாம் என்றார்.
Post a Comment