சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு பத்திரிகை கருத்துக் கணிப்பு நடத்தியதும், அதில் விஜய்க்கு முதலிடம் என்று கூறி, அதற்காக தனி விழாவே நடத்தப் போவதாகவும் அறிவித்ததும், அதனால் வெடித்துள்ள சர்ச்சைகளும் நினைவிருக்கலாம்.
இதை மையப்படுத்தி நமது ஒன்இந்தியா தளத்தில் ஒரு கருத்துக் கணிப்பை கடந்த வெள்ளிக்கிழமை நடத்தினோம்.
கருத்துக் கணிப்பின் தலைப்பு: 'விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம், மதுரையில் விழா.. இதெல்லாம் சரிதானா?'
இந்த கருத்துக் கணிப்பு, நமது தளத்தில் தொடர்ந்து மூன்று தினங்கள் நடந்தது.
இதில் 42,114 பேர் பங்கேற்று வாக்களித்தனர். 233 கருத்துகள் பதிவாகி இருந்தன.
சமீபத்திய ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் மிக அதிகம் பேர் பங்கேற்றதும் கருத்துக்களிட்டதும் விஜய் பற்றிய இந்த கருத்துக் கணிப்புக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுப்பது, மதுரையில் விழா எடுப்பதில் தவறில்லை என்று வாக்களித்தவர்கள் 18.63 சதவீத்ததினர் மட்டுமே.
இப்படி செய்வது தப்பாச்சே என்று 21.35 சதவீதத்தினரும்,
ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதாங்க, என்று 60.02 சதவீதத்தினரும் வாக்களித்திருந்தனர். அதாவது 81.37 சதவீதத்தினர் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதுமட்டுமல்ல, மிக காரசாரமான கருத்துகளை இந்த கருத்துக் கணிப்பில் காண முடிந்தது. பெருமளவு கருத்துகளில் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, "சூப்பர் ஸ்டார் என்பது பதவி நாற்காலி அல்ல. அது ஒரு நடிகருக்கு தரப்படும் சிறப்பு பட்டம். எப்படி புரட்சித் தலைவர், மக்கள் திலகம், நடிகர் திலகம் பட்டங்கள் குறிப்பிட்ட நடிகர்களுக்கு மட்டும் என வழங்கப்பட்டதோ, அப்படி ரஜினிக்கு வழங்கப்பட்டதே சூப்பர் ஸ்டார்.
அவருக்கு இது நிரந்தரமான அடைமொழி. அதைப் பறித்து தனக்கு சூட்டிக் கொள்ள நினைப்பது விஜய்க்கு அழகல்ல. அவர் தனது இளைய தளபதி பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டாலே போதும்," என ஒருமித்த கருத்துக்களைக் காண முடிந்தது.
"ஒரே ஒரு சூரியன் தான் பகலுக்கெல்லாம்!
ஒரே ஒரு சந்திரன் தான் இரவுக்கெல்லாம்!
ஒரே ஒரு பாஷா (சூப்பர் ஸ்டார் ) தான் உலகுக்கெல்லாம்!"
-என பாட்ஷா படப் பாடலையே இந்த விவகாரத்துக்கு முத்தாய்ப்பாகவும் சில வாசகர்கள் எழுதியுள்ளனர்.
+ comments + 3 comments
idhu kadavulukku adukkath
rajni must retire and rest
except mad rajni fanatic
who is supporting this idea
rajni is 65 mind that he can live 100 years and act
i am not ready to see
who can decide
fifteen laks fans have voted
whether u give title or not
vijay is the super star
RAJNI is not a tamilian
whereas our tamils dont support a tamilian shame
மக்கள் மனதிலும் திரை உலகிலும் ஒரே கம்பீரமான நிரந்தர தளபதி விஜய்!
இருபது வருடங்களை கடந்த அயராத உழைப்பு, இவரால்
உயர்கிறது தயாரிப்பாளர்களின்
வாழ்கை தரம், விஜய் என்ற
மூன்றெழுத்தில் அடங்கியது திரை உலகம், தலைவன்
சொல்லை தவிர வேறு வேத
வாக்கே இல்லை என்கிறது இளைஞர் கூட்டம், எதிர்ப்புகள் கோடி சந்தித்த போதிலும் இவரிடம் வெற்றிக்கு பஞ்சமில்லை
தோல்வியையும் சந்தித்தவர் தான் ஆனால் இவர் போல் ஒரு கௌரவத்தை நாம் அடைய வேண்டும் என நினைக்கும் இளம் நடிகர்களே அதிகம், பொதுவாக திரை துறையில் இவருக்கு எதிரிகள் என எவரும் இல்லை, அன்பு என்ற ஆயுதம்
ஒன்றை தவிர வேறெதற்கும்
தலை வணங்கியதில்லை, சூப்பர் ஸ்டார் என்ற கௌரவம் அடைந்து விட்டார் என்ற போதிலும், மக்கள் கருத்தில் பத்திரிக்கைகளின் வாயிலாக இன்றைய
இளைய தலைமுறையை ஆளும் சூப்பர் ஸ்டார் என்று கௌரவிக்கபட்ட போதிலும்
கடந்த காலத்தை மறவேன் என்று தேடி வந்த புகழை தள்ளி வைத்த தலைவன்!!
தேடி கிடைக்கா திரவியமாய்
வந்து சேர்ந்தாய் தமிழ் சினிமாவிற்கு, உன் ரசிகன் என்று சொல்வதை காட்டிலும்
வேறு என்ன பெருமை வேண்டும் எங்களுக்கு!!
தலைவன் ஒருவனே தளபதி மட்டுமே!!
Post a Comment