கலிபோர்னியா: ஹாரிபாட்டர் படத்தில் ஓநாய் மனிதனாக நடித்த டேவிட் லெஜினோ மர்மமான முறையில் பாலைவனம் ஒன்றில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் படமான ஹாரிபாட்டர் படத்தின் 3 பாகங்களில் ஓநாய் மனிதனாக நடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் லெஜினோ. 50 வயதான இவர் கலிபோர்னியா மாகாணத்தின் டெத் வேலி பகுதியில் உள்ள பாலைவனத்தில் சடலமாக கிடந்தார்.
தகவல் அறிந்ததும் ஹெலிகாப்டரில் சென்று அவரது உடலை காவல்துறையினர் மீட்டனர்.
பாலைவனப்பகுதியில் நீண்ட தூரப்பயணம் செய்த அவர் பாலைவனத்தின் கடுமையான வெப்பம் தாங்காமல் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டேவிட் லெஜினோ நடிகராவதற்கு முன்பு, குத்துச்சண்டை வீரர் ஆக இருந்தார். தற்போது, இவர் நடித்துள்ள ஸ்வர்டு ஆப் வெஞ்சன்ஸ் என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
Post a Comment