சென்னை: கோலிவுட்டில் அதிரடியாக நுழைந்து பண பலத்தால் ரசிகர்களை அசர வைத்த மீசைக்கார நடிகர் அரசியலில் குதித்து தற்போது மீண்டும் கோடம்பாக்கத்திற்கே வந்துவிட்டாராம்.
திடீர் என்று கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து நான் எல்லாம் ஆக்ஷன் ஹீரோ என்று கூறிக் கொண்டு வலம் வந்தார் அந்த மீசைக்கார நடிகர். நடிக்க வந்த அதே வேகத்தில் அரசியலிலும் குதித்தார். அவர் நேரம் எம்.பி.யாக ஆனார். நாடாளுமன்றம் சென்றார். அடடே அரசியலில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறாரே என்று பலரும் வியந்தனர்.
அந்த நேரத்தில் தான் அவர் இருந்த கட்சியில் குடும்ப பிரச்சனை ஏற்பட அவர் கட்சிக்கு டாட்டா பை பை சொல்லிவிட்டு அப்படியே எதிர் அணியில் போய் சரண் அடைந்தார். அந்த அதிகாரமிக்க கட்சியில் சேர்ந்த பிறகு மீசைக்காரர் என்ன செய்கிறார் என்று விசாரித்தால் மனிதர் மீண்டும் நடிக்க கிளம்பியது தெரிய வந்துள்ளது.
பை நிறைய பணத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு ஆக்ஷன் கதை சொல்கிறீர்களாக, படம் பண்ணலாம் என்று கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறாராம். மீசைக்காரர் பசை உள்ள பார்ட்டி என்பதை அறிந்த துணை இயக்குனர்கள் அவருக்கு நச்சுன்னு ஒரு கதையை சொல்லி இயக்குனராகிவிட வேண்டியது தான் என்று முடிவு செய்துள்ளார்களாம்.
Post a Comment