ஏம்ப்பா செவ்வாழை இதைக் கேட்டியா.. ஆர்குட் பவர்ஸ்டாரின் 'குழந்தை' பருவத்தை நினைவுபடுத்துதாம்!!

|

ஏம்ப்பா செவ்வாழை இதைக் கேட்டியா.. ஆர்குட் பவர்ஸ்டாரின் 'குழந்தை' பருவத்தை நினைவுபடுத்துதாம்!!

சென்னை: மூடுவிழா காணும் ஆர்குட் பவர்ஸ்டாருக்கு அவரின் குழந்தை பருவத்தை நினைவுபடுத்துகிறதாம்.

கூகுள் நிறுவனம் ஆர்குட் இணையதளத்தை வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி மூடுவதாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் பிரபலமானதால் ஆர்குட்டுக்கு மவுசு இல்லாமல் போனது. ஒரு காலத்தில் ஆர்குட்டில் சந்தித்து காதல் கொண்டவர்களும் உண்டு.

இந்நிலையில் ஆர்குட்டின் மூடுவிழா பற்றி பவர்ஸ்டார் சீனிவாசன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

உன்னை மிகவும் மிஸ் பண்ணுவேன் ஆர்குட். ஆர்குட்டில் எனது குழந்தை பருவத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு தான் ஆர்குட் துவங்கப்பட்டது. அப்படி என்றால் பவர் அப்போது குழந்தையாக இருந்தாரா. பவர் பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். உங்களிடம் பிடித்ததே இந்த காமெடி தான் பவர்.

 

Post a Comment