'தல' கையால் பிரியாணி சாப்பிட்ட கௌதம் மேனன் படக்குழு

|

சென்னை: அஜீத் குமார் தல 55 படக்குழுவினருக்கு தனது கையால் பிரியாணி சமைத்து கொடுத்துள்ளார்.

அஜீத் குமார் சூப்பராக பிரியாணி சமைப்பார் என்பது கோலிவுட்காரர்களுக்கு தெரியும். அவர் தான் நடிக்கும் படக்குழுவினருக்கு தனது கையாலேயே பிரியாணி சமைத்து பரிமாறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

'தல' கையால் பிரியாணி சாப்பிட்ட கௌதம் மேனன் படக்குழு

அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அஜீத் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக தல 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜீத் படப்பிடிப்பு தளத்தில் பிரியாணி சமைத்து படக்குழுவினருக்கு அளித்துள்ளார்.

100க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர் பிரியாணி சமைத்து கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜீத் 20 வயது வாலிபராக வருகிறாராம். அதற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் தல.

கோடம்பாக்கத்தில் தல பிரியாணி நாளுக்கு நாள் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு எல்லாம் பிரியாணி இல்லையா தல?

 

Post a Comment