சென்னை: மூத்த இயக்குநர் பாரதிராஜா, அடுத்த தலைமுறை கலைஞர்களுக்காக, திரைப்பட பள்ளியொன்றை சென்னையில் துவங்க உள்ளார்.
பதினாறு வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, திக்..திக்..திக் மற்றும் பல கிராமத்து காவியங்களை அளித்தவர், தேசிய விருதுக்கு சொந்தக்காரரான, இயக்குநர் பாரதிராஜா. இவர், சென்னையில் திரைப்பட பள்ளியொன்றை துவங்க உள்ளார்.
நேற்று முதல் அந்த பள்ளிக்கான பூர்வாங்க வேலைகள் துவங்கியுள்ளன. இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணத்தை தோண்டியெடுக்க வேண்டும் என்பதற்காக நான் திரைப்பட பள்ளி துவங்கவில்லை. சமூகம் எனக்கு அளித்த பாடங்களை அந்த சமூகத்துக்கே திருப்பி கொடுப்பதற்காகத்தான் இந்த திரைப்பட பள்ளியை துவங்கியுள்ளேன். இதிலிருந்து லாபம் சம்பாதிப்பது எனது நோக்கம் கிடையாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment