சென்னை: சமீபத்தில் "பிக்கப் டிராப்" நடிகர் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில், தங்களது படவிழாவுக்குக் கூட வராத நடிகைகள் பலர் ஆஜராகி மற்றவர்களை ஆச்சர்யப்படுத்தினார்கள்.
அது போதாதென்று, மைக்கைப் பிடித்த நடிகைகள் நடிகரை ஆஹாஹா ஓஹோஹோ என்றும் புகழ்ந்து தள்ளி விட்டனர். ஏற்கனவே, பிக்கப் டிராப் நடிகர் என்ற பெருமைக்குரிய பட்டத்தைப் பெற்ற நடிகர், இந்த விழா மூலம் நடிகைகள் மத்தியில் தனக்கிருந்த செல்வாக்கையும், "ஜொள்வாக்கை"யும் காட்டி விட்டார்.
குறிப்பாக வயதானாலும் இன்னும் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நம்பர் நடிகைகள், நடிகர் நடத்திய விழாவை குடும்ப விழா என்றும், நடிகரை தங்கள் குடும் த்தில் ஒருவர் என்றும் உரிமை கொண்டாடிப் பேசியதுதான் பலரை உசுப்பேத்தி விட்டு விட்டதாம்.
இந்த விழா தொடர்பான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வந்தது. இதைக் கேள்விப்பட்ட மற்ற நடிகர்கள் பிக்கப் டிராப் நடிகர் மீது பொறாமையில் உள்ளனராம். இதன் பலனாக சிலர் நடிகரிடம் பேசுவதைக் கூட தவிர்த்து வருகின்றனராம்.
விடுங்கப்பா.. குடும்பத்துக்குள்ள இதெல்லாம் சகஜம்... !
Post a Comment