ஜூனியருக்கு ஒரு ஜூனியர்... ஆண் குழந்தைக்கு தந்தையானார் என்டிஆர்!

|

ஹைதராபாத்: தெலுங்கின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் தந்தையாகியுள்ளார்.

என்.டி. ராமாராவ் குடும்ப வாரிசான ஜூனியருக்கும் அவர் மனைவி லட்சுமி பிரணதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் சேய் இருவரும் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஜூனியருக்கு ஒரு ஜூனியர்... ஆண் குழந்தைக்கு தந்தையானார் என்டிஆர்!

தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் ஜூனியர் என்டிஆர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ட்விட்டருக்கு வந்து, இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

'நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ட்விட்டருக்கு வருகிறேன். இன்று ட்வீட் செய்ய வேண்டும் என நான் உணர்கிறேன். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கும் எனது நன்றிகள். உங்கள் அனைவரையும் விரும்புகிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக தந்தையாகியுள்ள ஜூனியர் என்டிஆருக்கு நடிகை சமந்தா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் மனோஜ் மஞ்சு உள்ளிட்டோரும் வாழ்த்தியுள்ளனர்.

 

Post a Comment