மார்க்கெட்டே இல்லாமல் ரூ. 1 கோடி கேட்கும் நடிகை

|

சென்னை: மூன்று எழுத்து கா நடிகை ரூ. 1 கோடி சம்பளம் கேட்பதால் தான் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லையாம்.

ஆக்ஷன் கிங்கின் படம் மூலம் கோலிவுட் வந்தவர் மூன்று எழுத்து கா நடிகை. இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அவருக்கு சீயானுக்கு மறுவாழ்வு கொடுத்த இயக்குனரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிவப்பழகியான நடிகையை அந்த படத்தில் கருப்பாக காட்டியிருந்தனர். அந்த இயக்குனரின் படத்தில் நடித்த பிறகும் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. ஆள் அழகாக, நல்ல கலராக இருக்கிறார். அப்படி இருக்கையில் வாய்ப்பு மட்டும் ஏன் கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா?

அம்மணிக்கு மார்க்கெட்டே இல்லை. இந்நிலையில் அவர் படத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்கிறாராம். இவ்வளவு பெரிய தொகையை கேட்பதோடு மட்டும் அல்லாமல் ஓவராக கன்டிஷன் வேறு போடுகிறாராம்.

இவர் கேட்கும் தொகையை கொடுத்து அவர் போடும் கன்டிஷனை எல்லாம் ஏற்க யாரும் தயாராக இல்லை. அதனால் தான் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லையாம்.

 

Post a Comment