கொடுத்தால் ரூ. 2 கோடி கொடுங்க, இல்லாட்டி நடையை கட்டுங்க: நடிகை கறார்

|

சென்னை: பெரிய கண்களை உடைய ஜல் நாயகி சம்பள விஷயத்தில் ரூ.2 கோடியை விட்டு இறங்கி வர மறுப்பதால் தயாரிப்பாளர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளார்களாம்.

முட்டை கண்களை உடைய ஜல் நாயகி தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அம்மணிக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. மேலும் ஹீரோக்கள் எத்தனை மணிநேரம் தாமதமாக படப்பிடிப்புக்கு வந்தாலும் கோபப்படாமல் காத்திருந்து நடிப்பதால் நடிகைக்கு ஹீரோக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. அதனால் ஹீரோக்களின் பரிந்துரையின்பேரில் வாய்ப்புகள் மட்டும் இன்றி சம்பளமும் கோடிகளில் கிடைக்கிறது.

தமிழில் அவரது நிலைமை அப்படி இல்லையே. அவர் என்ன தான் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருந்தாலும் அவர் படங்கள் வெற்றி பெறவில்லை. இரண்டு படங்கள் மட்டும் தான் ஓடின. ஆனால் அதுவும் ஹீரோவுக்காகத் தான் ஓடின. சொல்லப் போனால் அந்த படங்களில் நடிகைக்கு வெயிட்டான கதாபாத்திரம் எல்லாம் கிடையாது.

நிலைமை இப்படி இருக்க தெலுங்கை போலவே தமிழ் படங்களுக்கும் தனக்கு ரூ. 2 கோடி தான் சம்பளமாக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் நடிகை. அடுத்தடுத்து ஹிட் கொடுக்கும் நடிகைகள் கூட இப்படி சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது இல்லை. அதனால் நடிகை மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளார்களாம்.

 

+ comments + 2 comments

Anonymous
1 August 2014 at 20:42

2nd innings number nadigaikku evvalavu kettalum kodukkum producers should also condemn number actress and book new comers

Anonymous
1 August 2014 at 20:43

2nd innings number nadigaikku evvalavu kettalum kodukkum producers should also condemn number actress and book new comers

Post a Comment