மும்பை: பாலிவுட் திரைப்படங்களிலேயே வசூல் ரீதியாக இவ்வாண்டின் இரண்டாவது சிறந்த படம் சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்ற பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் திரைப்படம் அதே பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு சக்கைபோடு போட்டது. இப்போது சிங்கம்-2 படத்தை சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். ஆகஸ்ட் 15ம்தேதி சுதந்திர தினத்தன்று வெளியான இத்திரைப்படமும் அடித்து கிழித்து வருகிறது.
திரைப்படம் ரிலீசாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் ரூ.116.3 கோடியை வசூலித்து, 100 கோடி குரூப்பிலும் சிங்கம் ரிட்டர்ன்ஸ் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. பாலிவுட்டில் இந்தாண்டில் வெளியாகிய படங்களில் சல்மான்கான் நடித்த கிக் திரைப்படம் ரூ.232.3 கோடி வசூலித்து முதலிடத்திலுள்ளது.
வசூலில், சிங்கம் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பின்னால் ஹாலிடே, ஜெய்கோ, ஏக்வில்லன் ஆகியவை வரிசையாக உள்ளன. இந்தாண்டு ஹிருத்திக் ரோஷனின் பேங் பேங், ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர், ஆமீர்கானின் பிகே ஆகிய திரைப்படங்கள் வெளிவர வேண்டியுள்ளன. எனவே ஆண்டு இறுதியில்தான் உண்மையான போட்டி ஆரம்பிக்கும் என்கின்றனர் மும்பைவாலாக்கள்.
Post a Comment