சென்னை: வேலையில்லா பட்டதாரி இந்தி ரீமேக்கில் நடிக்க ஆலியா பட் ரூ.3 கோடி சம்பளம் கேட்டதால் தனுஷ் அதிர்ந்து போனாராம்.
பாலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி ஹீரோயினாகிவிட்டார் ஆலியா பட். பலரின் தூக்கத்தை கலைக்கும் ஆலியா பட்டை கோலிவுட்டில் நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் தனுஷ் ஆலியாவை தனது அனேகன் படத்தில் நடிக்க வைக்க நினைத்தார். ஆனால் கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார் ஆலியா. இந்நிலையில் தனுஷ், அமலா பால் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தி ரீமேக்கில் தனுஷே நடிக்கிறாராம். இந்தியில் அமலா பால் கதாபாத்திரத்தில் ஆலியா பட்டை நடிக்க வைக்க நினைத்துள்ளார் தனுஷ். இதையடுத்து ஆலியாவை அணுகி விவரத்தை கூற அவரோ நான் நடிக்க ரெடி ஆனால் என் சம்பளம் ரூ. 3 கோடி மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.
ஆலியா கூறிய தொகையை கேட்டு தனுஷுக்கு தலை கிறுகிறுத்துவிட்டதாம். பாஸ், பாலிவுட்டில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடவே கோடிக் கணக்கில் சம்பளம் கேட்பார்கள். பாலிவுட்டில் நடித்து வரும் போதிலும் இது தனுஷுக்கு தெரியாமல் போய்விட்டதே.
Post a Comment