லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் தனது 40வது ஆண்டைக் கொண்டாடிய ரஜினி!

|

ஷிமோகா: நடிகர் ரஜினிகாந்த் திரையுலகுக்கு வந்து 40 ஆண்டுகளானதை, லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

கடந்த 1975-ம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினி.

லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் தனது 40வது ஆண்டைக் கொண்டாடிய ரஜினி!

தொடர்ந்து அவர் முதல் நிலை நடிகராகவே தமிழ் சினிமாவில் திகழ்கிறார். இந்திய அளவில் அவரை அனைத்து மொழி திரைத்துறையினரும் கொண்டாடுகிறார்கள். அவரது படங்களுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

திரையுலக வாழ்க்கையில் 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரஜினிக்கு லிங்கா படக்குழுவினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதைக் கொண்டாடும் வகையில் லிங்கா படப்பிடிப்புத் தளத்துக்கு பெரிய கேக் வரவழைக்கப்பட்டது.

லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் தனது 40வது ஆண்டைக் கொண்டாடிய ரஜினி!

அதை ரஜினி வெட்டி, படக்குழுவினருக்கு ஊட்டினார். ரஜினிக்கு வாழ்த்துச் சொல்லி, இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கேக் ஊட்டினார். நடிகர்கள் விஜயகுமார், நடிகை சோனாக்ஷி சின்ஹா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகரும் இயக்குநருமான ஆர் சுந்தரராஜன் ஆகியோர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

Post a Comment