பெயரில் இருந்து ரித்திக் ரோஷனை கழற்றிவிட்ட சூசன்

|

மும்பை: நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் தனது பெயரில் இருந்த ரோஷனை நீக்கிவிட்டார்.

நடிகர் ரித்திக் ரோஷன் சூசன் கானை காதலித்து கடந்த 200ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பாலிவுட்டின் சூப்பர் தம்பதியாக வலம் வந்தனர். யார் கண் பட்டதோ என்னவோ 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து ரிஹான், ரிதான் என்ற 2 குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர்.

பெயரில் இருந்து ரித்திக் ரோஷனை கழற்றிவிட்ட சூசன்

இதையடுத்து அவர்கள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அவர்கள் பிரிய ஒரு சில காரணங்கள் கூறப்படுகின்றன. சூசனுக்கும் மாடல் அழகியை திருமணம் செய்த நடிகருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துவிட்டதால் அவர் ரித்திக்கை பிரிந்தார் என்று ஒரு பேச்சு உள்ளது. மேலும் சூசன் போதை பொருளுக்கு அடிமையானதால் அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் பேசப்பட்டது.

இது தவிர ரித்திக் மற்றும் சல்மான் கான் மூலம் பாலிவுட் வந்த நடிகைக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதும் அந்த ஜோடி பிரிய ஒரு காரணம் என்று கூறப்பட்டது. என்ன காரணமோ ஏதோ நன்றாக இருந்த குடும்பம் பிரிந்துவிட்டது.

இந்நிலையில் சூசன் தனது பெயருக்கு பின்னால் இருந்த ரோஷனை நீக்கிவிட்டு மீண்டும் தனது தந்தையின் இரண்டாவது பெயரான கானை பயன்படுத்த துவங்கியுள்ளார்.

 

Post a Comment