மும்பை: மாநில மொழிப் படங்கள் அதிக அளவில் வர வேண்டும் என்றார் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஆமீர்கான்.
மகரந்த் தேஷ்பாண்டே என்பவர் இயக்கிய மராத்தி மொழிப் படமான சாடர்டே சண்டே படத்தின் சிறப்புக் காட்சிக்கு வந்திருந்தார் ஆமீர்கான். ஆமீர் நடித்த கயாமத் சே கயாமத் தக், சர்பரோஷ் போன்ற படங்களில் பணியாற்றியவர் இந்த மகரந்த் தேஷ்பாண்டே.
நிகழ்ச்சியில் பேசிய ஆமீர்கான், "இந்தியா ஒரு தேசம் என்றாலும் பல மொழிகள், வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்டது. அந்த மாநில மொழிகளில் படங்கள் உருவாகும்போது, இந்தியாவின் இந்த கலாச்சார, மொழிச் சிறப்பு அதிகம் வெளிப்படும்.
இந்த மாதிரி படங்கள் அதிகம் வரவேண்டும் என விரும்புகிறேன். என ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
ஏற்கெனவே மராத்தி போன்ற மாநில மொழிப் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment