சூர்யா நடித்துள்ள அஞ்சான் படத்தின் தெலுங்குப் பதிப்பான சிக்கந்தரின் இசையை வெளியிட்டார் நடிகர் நாகார்ஜூனா.
லிங்குசாமி இயக்கி தயாரித்துள்ள படம் அஞ்சான். இதில் சூர்யா ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.
சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கிலும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சூர்யாவின் பல படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த அஞ்சான் படத்துக்கு சிக்கந்தர் என்று தலைப்பிட்டு தெலுங்கில் வெளியிடுகின்றனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக ஹைதராபாதில் நடத்தினர்.
விழாவில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனா, இயக்குநர் ராஜமவுலி ஆகியோர் கலந்து கொண்டு இசையை வெளியிட்டனர்.
படத்தின் நாயகன் சூர்யா, நாயகி சமந்தா, இயக்குநர் லிங்குசாமி, தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Post a Comment