'பாலிவுட்டின் கிங்' நான் அல்ல ஷாருக்கான் தான்: சொல்வது பரம எதிரியான சல்மான் கான்

|

மும்பை: பாலிவுட்டின் கிங் ஷாருக்கான் என்று அவரது பரம எதிரியான சல்மான் கான் தெரிவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பாலிவுட்டின் முக்கியமான கான்களுக்குள் ஆகாது. சல்மான் கானுக்கும், ஆமீர் கானுக்கும் ஒத்துப் போனாலும் அவர்களுக்கும் ஷாருக்கானுக்கும் இடையே ஏழாம் பொருத்தம் தான். சந்து கேப்பில் ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவார்கள்.

'பாலிவுட்டின் கிங்' நான் அல்ல ஷாருக்கான் தான்: சொல்வது பரம எதிரியான சல்மான் கான்

இந்நிலையில் தான் பாலிவுட் மக்கள் நம்ப முடியாத அந்த அதிசயம் நடந்துள்ளது.

ஷாருக்கான்

பல ஹிட்கள் கொடுத்துள்ள போதிலும் தனது பரம எதிரியான ஷாருக்கானை பாலிவுட்டின் மன்னன் என்று சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பிற கான்கள்

பிற கான்களை பற்றி பேசுவதில் இனிமேல் தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று சல்மான் கூறியுள்ளார். இதை நம்ப முடியாத பலர் இது நிஜமா என்பதை தெரிந்து கொள்ள தங்கள் கையை தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்கின்றனர்.

சல்மான்

செய்தியாளர் ஒருவர் பாலிவுட்டின் மன்னன் பற்றி கேட்க ஓ, நீங்கள் ஷாருக்கானை பற்றி பேசுகிறீர்களா என்று சல்மான் கேட்க அவரோ இல்லை என்றார்.

பின்னால்

நான் பாலிவுட்டில் ஷாருக்கானை அடுத்து தான் உள்ளேன் என்று சல்மான் தெரிவித்துள்ளார். ஒரு வேலை சல்மானுக்கு காய்ச்சல் வந்து அந்த வேகத்தில் இப்படி பேசிவிட்டாரா என்று பலர் வியக்கிறார்கள்.

கிக்

ரம்ஜான் பண்டிகையையொட்டி ரிலீஸான சல்மான் கானின் கிக் படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று கூறப்பட்டது.

 

Post a Comment