ஸ்ருதி ஹாஸனை உதைத்த குதிரை.. ஹீரோ உதவியுடன் காயமின்றி தப்பினார்!

|

மும்பை: இந்திப் படம் ஒன்றின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது, நடிகை ஸ்ருதிஹாஸனை ஒரு குதிரை உதைத்தது. ஆனால் சரியான நேரத்துக்கு ஹீரோ கைகொடுத்ததால் அவர் காயமின்றி தப்பினார்.

'தேவர்' என்ற இந்தி படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இந்த படத்தில் நாயகனாக போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர் நடிக்கிறார்.

ஸ்ருதி ஹாஸனை உதைத்த குதிரை.. ஹீரோ உதவியுடன் காயமின்றி தப்பினார்!

இந்த பாடலுக்காக படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. ஒரு காட்சியில் சுற்றிலும் குதிரைகளை நிற்க வைத்து நடுவில் ஸ்ருதி ஹாசனும், அர்ஜூன் கபூரும் ஆடுவது போல காட்சியை எடுத்தனர்.

அப்போது ஸ்ருதி ஹாசனை நோக்கிப் பாய்ந்து வந்தது ஒரு குதிரை. திடீரென உதைத்தது. இதைப் பார்த்த அர்ஜூன் கபூர் பாய்ந்து சென்று ஸ்ருதிஹாசனை பிடித்து இழுத்தார். இதனால் காயமின்றி சுருதிஹாசன் தப்பினார்.

 

Post a Comment