டெல்லி: நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரின்பேரில் இசையமைப்பாளர் அன்குர் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு டெல்லியின் கைலாஷ் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் அந்த 27 வயது இளம் நடிகை. இவர் சொந்தமாக சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டுவருகிறாராம்.
நடிகை தங்கியிருந்த ஹோட்டலுக்கு, பட விவாதம் தொடர்பாக, வியாழக்கிழமை காலை இசையமைப்பாளர் அன்குர் ஷர்மா வந்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் நடந்த இசை நிகழ்ச்சியொன்றில் இவ்விருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதன் காரணமாக, அடுத்த படம் குறித்த விவாதத்துக்கு அந்த நடிகை, இசை அமைப்பாளருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஹோட்டலில் விவாதம் நடந்தபோது, திடீரென நடிகையை கட்டிப்பிடித்து தவறாக நடக்க ஆரம்பித்துள்ளார் அன்குர் ஷர்மா.
எவ்வளவோ தடுத்தபோதும், வலுக்கட்டாயப்படுத்தி நடிகையுடன் உடலுறவு வைத்துள்ளார் அன்குர் ஷர்மா. இதனிடையே சத்தம் கேட்டு வந்த ஹோட்டல் ஊழியர்கள், அன்குர் ஷர்மாவை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
குற்றவாளியிடமிருந்து டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment