மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். எனக்கென ஒரு குடும்பம் வேண்டும், என்று கூறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.
அவர் அளித்துள்ள பேட்டியில், "எனக்கு 25ல் முதல் திருமணம் நடந்தது. ஆனால் அந்தத் திருமணம் மூன்று மாதங்கள்தான் நிலைத்தது. என் 30வது வயதில் இரண்டாவது திருமணம்.
ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. விவாகரத்துக்காக காத்திருக்கிறோம். இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். மீண்டும் திருமணம் செய்ய வேண்டும், எனக்கென குடும்பம் வேண்டும் என உணர ஆரம்பித்துள்ளேன்.
என்னுடைய பிரச்சினையே, என் துணையுடன் அதிக நேரம் ஒதுக்க முடியாமல் போவதுதான். ஆண்டுக்கு 10 படங்களுக்கு மேல் இசையமைக்க வேண்டியுள்ளது. அதில் எனது நேரம் முழுவதும் போய்விடுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment