சென்னை: குருவிக்காரன் சோலை என்ற இடத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சீமான் மற்றும் பவர்ஸ்டார் நடிக்க உள்ளனர்.
யுவபிரியா கிரியேஷன் தயாரிக்கும் படம் ‘குருவிக்காரன் சோலை'. இதில் நாயகன், நாயகியாக புதுமுகங்கள் ஜெய்காந்த், கிரிஷா நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சீமான், பவர்ஸ்டார், வையாபுரி, சுகன்யா, யுவராணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.நாதன். தனது படத்தை பற்றி இயக்குனர் நாதன் கூறும்போது, ‘தன் குடும்பத்திற்காக காதலனை பழிவாங்குகிறார் காதலி, இதில் காதலி, காதலனை கொல்லமாட்டாள். மாறாக வேறொரு தண்டனையை காதலனுக்கு தருகிறாள். அது என்ன? என்பது படத்தின் கிளைமாக்ஸ் எனத் தெரிவித்துள்ளார்.
இப்படத்திற்கு தஷி இசையமைக்க, ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்கி, குற்றாலம், தலக்கோணம் ஆகிய பகுதிகளில் முழுவீச்சில் நடைபெறவுள்ளது.
இரண்டு பாடல் காட்சிகளுக்காக மட்டும் இக்குழு மலேசியா செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment