அஞ்சலியை வைத்து பேய் படம் எடுத்த தெலுங்கு இயக்குனர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

|

ஹைதராபாத்: அஞ்சலியை வைத்து கீதாஞ்சலி என்ற பேய் படத்தை எடுத்துள்ள தெலுங்கு இயக்குனர் ராஜ் கிரணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அஞ்சலியை வைத்து பேய் படம் எடுத்த தெலுங்கு இயக்குனர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

சித்தி பிரச்சனையை அடுத்து ஆந்திராவில் செட்டிலான அஞ்சலி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் புதுமுக இயக்குனர் ராஜ் கிரண் என்பவர் அஞ்சலியை வைத்து கீதாஞ்சலி என்ற ஹாரர் காமெடி படத்தை எடுத்துள்ளார். படத்தில் அஞ்சலி தான் கீதாஞ்சலி.

கீதாஞ்சலி படத்தை வரும் 8ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் இதுவரை சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கவில்லை. இதை நினைத்து கவலைப்பட்ட ராஜ் கிரணக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த படத்தை எம்.வி.வி. சத்யநாராயணா தயாரிக்க திரைக்கதை எழுதியுள்ளார் கோனா வெங்கட். படத்தில் ஹர்ஷ்வர்தன் ரானே, பிரம்மானந்தம், ஸ்ரீனிவாச ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அஞ்சலி சிறு இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் கோலிவுட் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment