படப்பிடிப்புக்கு வந்து விட்டு கேரவனுக்குள் போய் படுத்துத் தூங்கும் 'பொடி' ஹீரோ!

|

சென்னை: பொடியங்க படம் மூலம் ஹீரோவான நடிகர் படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் தூங்குகிறாராம்.

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அந்த மூன்று எழுத்து நடிகர் பாண்டி இயக்குனரின் பொடியங்க படம் மூலம் ஹீரோவானார். அதையடுத்து வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

அவர் நடிப்பில் அண்மையில் வெளியான பேக் படம் நன்றாக ஓடியது. இதனால் மகிழ்ச்சியில் இருந்தார் நடிகர். அந்த படம் ஓடியதும் நடிகர் படப்பிடிப்புக்கு வந்தால் அவரின் அதிகாரம் தூள் பறக்கிறதாம். மேலும் படப்பிடிப்புக்கு வந்தால் கேமரா முன்பு வந்து நிற்காமல் கேரவனுக்குள் படுத்து தூங்குகிறாராம். எழுப்பினால் கோபப்படுகிறாராம்.

அப்படியே எழுந்து வந்தாலும் தூக்கத்திலேயே கேமரா முன்பு வருகிறாராம். இதே போன்று இவர் தொடர்ந்து நடந்து கொண்டால் கஷ்டம் என்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

ஒரு படம் ஓடினால் அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு கடினமாக உழைக்காமல் இந்த நடிகர் என்ன என்றால் இப்படி அக்கப்போரு செய்கிறாரே என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள்.

 

Post a Comment