சீனியர் ஹீரோ பேசிய 'பஞ்ச்'சால் அல்லாடும் இளம் ஹீரோ

|

சென்னை: பிரபல நடிகரும், இயக்குனருமான அவர் ஒரு மேடையில் இளம் ஹீரோவை பற்றி பேசிய ஒரேயொரு பஞ்ச் வசனம் அவருக்கு பெயராகிவிட்டது.

கதையே இல்லாமல் படம் எடுக்கும் அந்த நடிகர், இயக்குனர் சினிமா விழாக்களில் கலந்து கொண்டு மேடையில் பேசுகையில் சுவாரஸ்யமாக பேசி அனைவரின் கைதட்டல்களை வாங்கிவிடுவார். அருமையாக கவிதையும் எழுதக்கூடியவர் அவர். அவர் ஒரு மேடையில் பேசுகையில், இந்த ஹீரோ எப்படி பிக்கப் செய்கிறார் டிராப் செய்கிறார் என்றே தெரியவில்லை என்று கூறி கைதட்டல்களை பெற்றார்.

அவர் யாரைப் பற்றி பேசினாரோ அந்த ஹீரோவும் அதை கேட்டு சிரித்துக் கொண்டு தான் இருந்தார். ஆனால் அந்த சீனியர் ஹீரோ கூறிய பிக்கப் டிராப் பஞ்ச் தற்போது அந்த இளம் ஹீரோவின் பட்டப்பெயராகிவிட்டது.

அந்த இளம்ஹீரோவின் பெயரை கூறினாலே ஓ, பிக்கப் டிராப் நடிகரா என்று கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது. சீனியர் ஹீரோ ஏதோ சுவாரஸ்யமாக பேசுகிறேன் என்று கூற அதுவே இளம்ஹீரோவுக்கு தலைவலியாகிவிட்டது.

இப்படி தான் அந்த சீனியர் ஹீரோ விழா ஒன்றில் மில்க் நடிகையின் காதலையும் போட்டு உடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment