‘சிகரம் தொடு' படத்துக்குப் பிறகு இயக்குநர் விஜய்யுடன் கைகோர்க்கிறார் விக்ரம் பிரபு.
படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது சிகரம் தொடு. இந்நிலையில் தன் அடுத்தப் படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டார் விக்ரம் பிரபு.
‘சைவம்' படத்தை முடித்துவிட்டு, அமலா பாலை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலான விஜய், திருமணத்துக்குப் பிறகு இயக்கும் முதல் படம் இது.
இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இவர் மலையாளத்தில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘ரிங் மாஸ்டர்' படம் வெற்றிப் பெற்றது. இவ்வெற்றியே இவரை தமிழுக்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
விக்ரம் பிரபு-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
Post a Comment