சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்ஏ சந்திரசேகரன் படத்துக்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா.
எஸ் ஏ சந்திரசேகரன் - ஷோபா நாடகக் குழு வைத்து இயங்கிய நாட்களில் அவர்களின் நாடகங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா.
பின்னர் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கிய நீதியின் மறுபக்கம், நான் சிகப்பு மனிதன், எனக்கு நானே நீதிபதி உள்ளிட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
ஷோபா இயக்கிய இன்னிசை மழை படத்துக்கும் இசையமைத்தார் இளையராஜா.
இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கும் புதிய படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் இசைஞானி.
இந்தப் படம் எப்படி இருக்கும் என்பதை ஒரு வீடியோவாகவே எடுத்து சமீபத்தில் இளையராஜாவுக்கு போட்டுக் காட்டினாராம் எஸ்ஏசி. அதைப் பார்த்து திருப்தியடைந்து இளையராஜா, படத்துக்கு இசையமைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
Post a Comment