பழைய நினைவுகளின் பாதிப்பு! அரை மணி நேரம் தேம்பி தேம்பி அழுத நயன்தாரா!!

|

சென்னை: ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள அமரகாவியம் திரைப்படத்தை பார்த்துவிட்டு, நயன்தாரா 30 நிமிடம் தேம்பி, தேம்பி அழுததுதான் இப்போது கோலிவுட்டில் டாக் ஆப் தி டவுனாக உள்ளது.

ஆர்யா தயாரிப்பில், 'நான்' திரைப்பட புகழ், ஜீவா சங்கர் இயக்கி, உருவாகியிருக்கும் திரைப்படம் அமரகாவியம். சமீபத்தில், இந்த படத்தின் சிறப்பு காட்சியை நெருங்கிய நண்பர்களுக்கு போட்டு காண்பித்துள்ளார் ஆர்யா. அந்த நண்பர்களில் நயன்தாராவும் ஒருவராம்.

பழைய நினைவுகளின் பாதிப்பு! அரை மணி நேரம் தேம்பி தேம்பி அழுத நயன்தாரா!!

படத்தை பார்த்த நயன்தாரா, சுமார் அரை மணி நேரம் விடாமல் தேம்பி, தேம்பி அழுதுள்ளார். காதலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது அமரகாவியம். இதை பார்த்ததும், தனக்கு பல பழைய நினைவுகள் வந்துவிட்டதாக நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளார் நயன்.

இந்த தகவலை ஜீவா சங்கரும் உறுதி செய்துள்ளார். மனரீதியாக உறுதியானவர் நயன்தாரா. அவரே எனது கதையை பார்த்துவிட்டு கலங்கிவிட்டார். எனவேதான் வெகுநேரமாக அவர் அழுதபடி இருந்தார். அவ்வளவு ஏன், வீட்டுக்கு திரும்பிய பிறகும் நயன்தாரா அழுதுள்ளார்.

படத்தை பார்த்த ஐந்து நாட்களுக்கு பிறகு நயன்தாரா என்னை போனில் தொடர்பு கொண்டார். அப்போது, என்னால் இந்த படத்தை பற்றி யோசிப்பதை நிறுத்திக்கொள்ள முடியவில்லை என்று நயன்தாரா என்னிடம் கூறினார். இது ஒரு படைப்பாளியாக எனக்கு கிடைத்த பாராட்டு. ரசிகர்களை சிரிக்க வைப்பதும், அழ வைப்பதுதான் திரைப்பட உருவாக்கத்தில் சவாலான விஷயம் என்றார் அவர்.

அமரகாவியம் திரைப்படத்தில் ஆர்யாவின் சகோதரர் சத்யா ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

+ comments + 1 comments

Anonymous
24 August 2014 at 17:02

is it true love? In that case how one o on changes their persons?
all publicity stunt?

Post a Comment