திருவனந்தபுரம்: நடிகை சரிதா-நடிகர் முகேஷின் விவாகரத்து வழக்கின் விசாரணையை கேரள நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
மலையாள திரை உலகின் பிரபல நடிகர் முகேஷ். அவர் கோலிவுட்டில் ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக இருந்த சரிதாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்தார்கள். இதையடுத்து முகேஷ் விவாகரத்து கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கையில் முகேஷ் தேவிகா என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர், சரிதா மற்றும் குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
சரிதா நீதிமன்றத்தில் கூறுகையில்,
வழக்கு குறித்த நோட்டீஸ் எனக்கு வரவில்லை. மேலும் விவாகரத்து காலத்திற்கான அவகாசமும் எனக்கு அளிக்கப்படவில்லை. இந்த வழக்கில் முகேஷ் எனக்கு தெரியாமல் சதி செய்கிறார் என்றார்.
அவரின் வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Post a Comment