பிகே படத்துக்காக ஆமீர்கான் நிர்வாணமாக போஸ் கொடுத்திருப்பது கூட சொந்த ஐடியா இல்லையாம். எழுபதுகளில் வெளியான ஒரு போர்ச்சுக்கீசிய பாடகரின் வீடியோவிலிருந்து சுட்டது என மும்பை பத்திரிகைகள் அம்பலமாக்கியுள்ளன.
ஆமீர் கான் நடித்த ‘பி.கே' திரைப்படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களில் வெளியாகின. அதில், அவர் ஒரு பழைய டேப் ரிக்கார்டரால் தனது முக்கிய பாகத்தை மட்டும் மறைத்தபடி நிர்வாணமாக காட்சி அளித்தார் ஆமீர்கான்.
சர்ச்சை
அவரது இந்த புதிய ஆபாசப் படம் பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக வக்கீல் ஒருவர் அளித்த புகாரின்பேரில், அமீர்கான் மீது வழக்குபதிவும் செய்யப்பட்டுள்ளது.
'அம்மண காப்பி'
இது ஒரு பக்கம் என்றால், இந்த அம்மணப் பட ஐடியா கூட ஆமீருக்கோ படக்குழுவுக்கோ சொந்தமானதில்லையாம். அதையும் வெளிநாட்டுப் படத்திலிருந்துதான் காப்பியடித்திருக்கிறார்கள் என்று மும்பை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர்ச்சுகல் ஆல்பத்திலிருந்து
1973-ம் ஆண்டு போர்ச்சுக்கீசிய இசையமைப்பாளர் கியூம் பெர்ரைரோஸ் என்பவர் தயாரித்த ஆல்பம் ஒன்றில், ஒரு இசைக்கருவியை கையில் பிடித்தவாறு நிர்வாணமாக காட்சி அளித்தார். இந்த காட்சியை அப்படியே காப்பியடித்து ஆமீர் கானை நிர்வாணமாக போஸ் கொடுக்க வைத்துள்ளனர்.
தூம் 3-லும்...
ஏதோ இந்த ஒரு படத்தில்தான் இப்படி என்றில்லை. ஆமீர்கான் மற்றும் பாலிவுட்டின் பிரபல நடிகர்களின் பெரும்பாலான படங்களில் போஸ்டர் உள்பட பல காட்சிகள் மேற்கத்திய படங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்டவைதானாம்.
ஆமீர்கான் நடித்து சமீபத்தில் வெளியான ‘தூம்-3' படத்தின் முதல் காட்சியே தி டார்க் நைட் படத்திலிருந்து உருவியதுதானாம்.
இன்னும் இருக்கு...
‘ரான் ஓன்', ‘ராம் லீலா' மற்றும் ‘அஞ்சனா அஞ்சானி' போன்ற படங்களின் போஸ்டர்கள், காட்சிகள் பல ஹாலிவுட்டிலிருந்து சுட்டவைதானாம்!
Post a Comment