சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது ரசிகர்களுக்காக ரஹ்மான் போன் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தி உள்ளார்.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் தனது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளார். இந்நிலையில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கவும், தனது இசையை அவர்களுக்கு கொண்டு செல்லவும் ரஹ்மான் புதிய செல்போன் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த அப்ளிகேஷன் தற்போது ஐபோன் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆன்ட்ராய்ட் போன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரஹ்மான் அப்ளிகேஷனை ரஹ்மான், நடிகரும், தயாரிப்பாளருமான ஷேகர் கபூர், சமீர் பங்காரா ஆகியோர் துவங்கிய ஆன்லைன் நிறுவனமான க்யூகி.காம் உருவாக்கியுள்ளது.
இது குறித்து ரஹ்மான் கூறுகையில்,
என்னுடனும், எனது இசையுடனும் ரசிகர்கள் தொடர்பில் இருக்க வசதியாக புதிய வழியை அறிமுகப்படுத்தி உள்ளோம். எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு இதன் மூலம் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தாய் திருநாட்டிற்கு சலாம் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment