சென்னை: டோலிவுட்டின் பெரிய குடும்பத்து நடிகருக்கு உடம்பில் மச்சம் இருக்கிறதா, இல்லை மச்சத்தில் உடம்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.
டோலிவுட்டின் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த இரண்டு எழுத்து உயர்ந்த நடிகர் காட்டில் எப்பவும் மழை தான். ஆள் வஞ்சனையே இல்லாமல் ஆறடிக்கும் மேல் வளர்ந்துள்ளார். கட்டுமஸ்தான உடல் வேறு. அவர் வாழ்வில் தான் எத்தனை எத்தனை காதலிகள்.
தற்போது மார்க்கெட் இல்லாத சிவாஜி நாயகி, விஜய்யுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாலிவுட் கவர்ச்சி பிசாசு, நம்ம மூனுஷா உள்ளி்ட்டோர் அவர் வாழ்வில் வந்த வசந்தங்கள். இதில் மூனுஷாவுடன் தான் நடிகரின் பெயர் அடிக்கடி அடிபடும்.
இந்நிலையில் நடிகரின் வாழ்வில் புதிய பெண் ஒருவர் வந்துள்ளாராம். நடிகர் அடிக்கடி ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு பறப்பவர். அப்படி மும்பை சென்ற இடத்தில் அவருக்கும், ஜீன்ஸ் நாயகனின் படத்தில் குத்தாட்டம் போட்டுள்ள இந்தி நடிகைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம்.
நட்பு டெவலப் ஆகி இருவரும் ஜோடியாக மும்பையில் சுற்றுகிறார்களாம். ஒரு பாடல் மூலம் கோலிவுட் வந்த நடிகை விரைவில் டோலிவுட் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
Post a Comment