தேசிய விருது வாங்கிய வெற்றிமாலை சூட்டிய படத்தில் அறிமுகமான இனிமையான நடிகை அவர். குடும்பப் பாங்கான நடிகையாக சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்ற எதிர்பார்ப்பை தனது முதல் படத்திலேயே உண்டாக்கினார்.
வாட்டசாட்டமான உடல்வாகு இருந்தும் ஏனோ நடிகைக்கு அடுத்தடுத்து சொல்லிக் கொள்ளுமளவிற்கு நல்ல படங்கள் அமையவில்லை. ஆனாலும், நடிகை அதற்கெல்லாம் சோர்ந்து விடவில்லை.
கிடைத்த கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் சமீபத்தில் கலர்மேன் படத்தில் அதிரடியான அழகிய வில்லியாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து தற்போது புதிய படமொன்றில் ஐயிட்டம் பாடலில் நடிக்கவும் ஓகே சொல்லி விட்டார். இடையிடையே விளம்பரங்களிலும் தோன்றுகிறார்.
புத்திசாலிப் பெண் என நடிகையை திரைவட்டாரத்தில் உள்ளவர்கள் பாராட்டுகிறார்கள். நடித்தால் நாயகியாக மட்டும் தான் என அடம் பிடிக்காமல், காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன் படுத்திக் கொள்கிறார் என்கிறார்கள்.
Post a Comment