அதெப்படி அந்த பெண் போலீஸ் ஷாருக்கானுடன் மேடையில் ஆடலாம்?: எதிர்க்கட்சிகள் கண்டனம்

|

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த ரக்ஷா பந்தன் கொண்டாடத்தின்போது நடிகர் ஷாருக்கான் பெண் போலீஸ் ஒருவரை தூக்கி நடனம் ஆடியதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாட்டம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்து கொண்டு நடிகர் ஷாருக்கான் கையில் ராக்கி கட்டினார்.

அதெப்படி அந்த பெண் போலீஸ் ஷாருக்கானுடன் மேடையில் ஆடலாம்?: எதிர்க்கட்சிகள் கண்டனம்

விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது நடனம் ஆடிய ஷாருக்கான் பெண் போலீ்ஸ் ஒருவரை தூக்கினார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் ரித்தேஷ் திவாரி கூறுகையில்,

சீருடையில் இருக்கும் பெண் போலீஸ் மேடையில் நடனம் ஆட எவ்வாறு அனுமதி அளிக்கலாம்? என்றார். சீருடையில் இருக்கும் போலீசார் நடனம் ஆட விதிகள் அனுமதிப்பது இல்லை என்று மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் நடிகை பிபாஷா பாசுவும் கலந்து கொண்டார்.

 

Post a Comment