கத்தி இசை... வாங்கத் தயங்கும் இசை வெளியீட்டு நிறுவனங்கள்!

|

தமிழ் ஈழ ஆதரவுக் கட்சியினர், தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கத்தி படத்தின் இசையை வாங்க இசை வெளியீட்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் கத்தி படம் ஏகப்பட்ட சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. படம் வெளியாவதே கடினம் என்ற நிலை. 65 தமிழ் இயக்கங்களும், கட்சிகளும் படத்துக்கு எதிராகக் கிளம்பியுள்ளன. ராஜபக்சேவின் பினாமி தயாரித்துள்ள இந்தப் படத்தைத் தடை செய்யக் கோரி தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளன.

கத்தி இசை... வாங்கத் தயங்கும் இசை வெளியீட்டு நிறுவனங்கள்!

இந்த சூழலைக் கருத்தில் கொண்டு படத்தை வாங்கவே விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் தயங்கி வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு உரிமையை வாங்க முன்வந்த பெரிய நிறுவனமும் இப்போது பின்வாங்க முடிவு செய்துள்ளதாம். வேறு நிறுவனங்கள் எதற்கு வம்பு என ஒதுங்குகின்றனவாம்.

உண்மையில் இந்த மாதம்தான் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் இசை அமைத்துக் கொடுப்பதில் தாமதம், வெளியிட நிறுவனங்கள் காட்டும் தயக்கம் காரணமாக, இப்போதைக்கு பிரச்சினை தீரும் வரை அமைதி காப்போம் என முடிவு செய்துள்ளார்களாம்.

 

Post a Comment