இந்த நடிகை என்ன 'உல்டா'வாக செயல்படுகிறாரே?

|

சென்னை: தென்னிந்திய நடிகைகளில் மேனன் இயக்குனரின் மனம் கவர்ந்த ஹீரோயின் உல்டாவாக செயல்படுகிறார்.

தென்னிந்திய திரை உலகில் உள்ள நடிகைகள் தமிழில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ் படங்களில் கவர்ச்சி காட்டி நடித்தாலும் அதற்கு ஒரு லிமிட் வைத்துள்ளனர். அதே நடிகைகள் ஆந்திரா பக்கம் சென்று அங்குள்ள ரசிகர்களை கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கிறார்கள்.

இதை பார்க்கும் கோலிவுட் ரசிகர்களோ அடப்பாவிகளா நம்ம ஊருக்கு என்றால் ஒரு அளவு, அவர்களுக்கு மட்டும் தாராளமோ என்று பல காலமாக கூறி வருகிறார்கள். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த மேனன் இயக்குனரின் மனம் கவர்ந்த அந்த நாயகி டோலிவிட்டின் முன்னணி நாயகியாக உள்ளார். கோலிவுட்டிலும் அப்படி ஆகும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

அவர் பிற நடிகைகளை போன்று ஆந்திராவில் படுகவர்ச்சி காட்டவில்லை. ஆந்திராவில் கவர்ச்சியாக நடித்து வரும் நடிகை தமிழில் சிங்கம் ஜோடியாக நடித்துள்ள படத்தில் கவர்ச்சியில் மிகவும் தாராளம் காட்டியுள்ளார்.

இவர் தான் ஆந்திராவில் கவர்ச்சியில் தாராளம் தமிழகத்தில் சிக்கனம் என்று இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் உல்டாவாக செயல்படுகிறார்.

 

Post a Comment