‘சில்க்’ அஞ்சலி ஐயிட்டம் நடிகையானால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்... இயக்குநர் பேச்சால் பரபரப்பு

|

ஹைதராபாத்: படு கவர்ச்சியாக நடித்து வரும் நடிகை அஞ்சலி தான் அடுத்த சில்க் ஸ்மிதா என தெலுங்குப்பட இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அறிமுகப் படங்களில் குடும்ப குத்துவிளக்காகத் தோன்றிய நடிகை அஞ்சலி, சமீபகாலமாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். சூர்யாவின் சிங்கம் -2 படத்தில் கூட ஒரு பாடலுக்குத் தோன்றி கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார் அஞ்சலி.

இடையில் கொஞ்சகாலம் தனிப்பட்ட சில பிரச்சினைகளால் சினிமாவை விட்டு விலகியிருந்த அஞ்சலி தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.

‘சில்க்’ அஞ்சலி ஐயிட்டம் நடிகையானால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்... இயக்குநர் பேச்சால் பரபரப்பு

கவர்ச்சி மழை...

தற்போது ‘கீதாஞ்சலி' என்ற தெலுங்கு படத்தில் தாராள ஆடை குறைப்புடன் நடித்து வருகிறாராம் அஞ்சலி.

தமிழிலும்...

தமிழில் ஜெயம் ரவியுடன் நடித்து வரும் படத்திலும் அஞ்சலி கவர்ச்சியாக நடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

சில்க் ஸ்மிதா படம்...

இதற்கிடையே, கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக பல மொழிகளில் வெற்றி பெற்றது.

ஷகிலா வாழ்க்கைப்படம்....

இதனால், அடுத்து கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை படமாக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். இதில் ஷகிலா வேடத்தில் அஞ்சலி நடிக்கப் போவதாக செய்திகள் பரவி உள்ளன.

ஷகிலாவாக அஞ்சலி...

சமீபகாலமாக அஞ்சலி கவர்ச்சியாக தோன்றுவதாலேயே, அவரை ஷகிலா கேரக்டருக்கு தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அஞ்சலி தான் அடுத்த சில்க் ஸ்மிதா என தெலுங்கு டைரக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐயிட்டம் நடிகை...

ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் பங்கேற்ற தெலுங்கு இயக்குநர் ஒருவர்,‘‘அஞ்சலி மறைந்த நடிகை சில்க்ஸ்மிதாவை போல் கவர்ச்சியாக இருக்கிறார். சிங்கம்-2 படத்தில் அஞ்சலி ஆடிய குத்தாட்டம் பிரமாதமாக இருந்தது. அஞ்சலி மட்டும் குத்தாட்ட நடிகையாக மாறினால் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்'' எனப் புகழ்ந்துள்ளார்.

அஞ்சலி கோபம்...

ஆனால், இயக்குநரின் பேச்சை ரசிக்காத அஞ்சலி, சில்க்ஸ்மிதாவுடன் தன்னை ஒப்பிட்டு பேசியதால் கோபமாகி அவ்விழாவில் இருந்து பாதியிலேயே வெளியேறி விட்டாராம்.

 

Post a Comment