பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த ஷக்தி வேலன் இயக்கும் புதிய படத்துக்கு திருட்டுக் கல்யாணம் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
கதாநாயகனாக ரங்காயாழி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர் வழக்கு எண் 18/9 படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்தவர். கதாநாயகியாக தேஜஸ்வீ அறிமுகமாகிறார். இவர் மூடர்கூடம் படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தவர்.
ஆடுகளம் நரேன், பசங்க செந்தி, தம்பி ராமையா, தேவதர்ஷினி ஆகியோருடன் ஒரு முக்கிய பாத்திரத்தில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் நடிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் - ஷக்திவேலன். இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சசி போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குனர் ஷக்திவேலனிடம் பேசியபோது, "திருட்டுக்கல்யானம் பண்ணிக்கிறமா? திருக்கல்யாணம் பண்ணிக்கிறமா? என்பது முக்கியமல்ல. கல்யாணம் பண்ணிகிறதும் சந்தோஷமா வாழ்றதும்தான் முக்கியம் என்ற கருத்தை மையமாக வைத்துதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்காக டெஸ்ட் ஷூட் பண்ணும்போதே படத்திற்காகப் பேசப்பட்ட முழு தொகையையும் பெற்றுக் கொண்ட நாயகன், நாயகி இவர்களாகத்தான் இருப்பார்கள்.
படத்தின் படப்பிடிப்பு கோவை, கடலூர், சென்னையை தொடர்ந்து கடப்பாவிலும் நடைபெற்றுக் கொண்டிருகிறது," என்றார்.
Post a Comment