ஃபெப்சி புதிய தலைவராக ஜி சிவா தேர்வு!

|

சென்னை: ஃபெப்சி அமைப்பின் புதிய தலைவராக ஜி சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சிக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.

திரைப்பட தொழிலாளர் சங்கங்களின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்த நிர்வாகிகள் நேரில் வந்து வாக்களித்தனர். மொத்தம் 63 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இவர்களில் 62 பேர் நேரில் வந்து வாக்களித்தனர்.

ஃபெப்சி புதிய தலைவராக ஜி சிவா தேர்வு!

அதில் சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜி.சிவா வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்டன்ட் சிவாவை விட 36 வாக்குகள் அதிகம் பெற்றார் ஜி சிவா.

செயலாளர் பதவிக்கு கே.ஆர்.செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 44 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட உமாசங்கர் பாபுவுக்கு 18 வாக்குகளும் கிடைத்தன.

பொருளாளராக சந்திரன் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஃபெப்சி தலைவராக இதற்கு முன் இயக்குநர் அமீர் பதவி வகித்தார். அவர் இந்த முறை போட்டியிடவில்லை.

 

Post a Comment