கத்தி.. லைகா நிறுவனப் பெயருடன் வெளியான இரு புதிய போஸ்டர்கள்

|

விஜய் நடிக்கும் கத்தி படத்தின் புதிய போஸ்டர்கள் இன்று வெளியாகின. அவற்றில் தயாரிப்பாளராக லைகா நிறுவனத்தின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

சுபாஷ்கரண் அல்லிராஜாவின் லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது. இலங்கையில் பல்வேறு வர்த்தகங்களை நடத்த லைகாவுக்கு ராஜபக்சே அனுமதி அளித்துள்ளார். இந்த நிறுவனத்தில் ராஜபக்சேவின் உறவினர்கள் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.

கத்தி.. லைகா நிறுவனப் பெயருடன் வெளியான இரு புதிய போஸ்டர்கள்

ஒரு இனப்படுகொலையாளிக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழகத்தில் சினிமாவில் கால்பதிக்க விடக்கூடாது என்று கூறி பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. கத்தி படத்தை வெளியிட விட மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.

சமீபத்தில் 65 அமைப்புகள் மற்றும் கட்சிகள் இணைந்து கத்தி படத்துக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தை அறிவித்தனர்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பிலிருந்து லைகா விலகிக் கொள்ளும், அதற்கு பதில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் படத்தைத் தயாரிக்கும் என்று கூறப்பட்டது.

சொன்னபடியே நேற்று மாலை கத்தி படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. ஆனால் தயாரிப்பாளராக லைகா நிறுவனத்தின் பெயரே இவற்றில் இடம்பெற்றிருந்தது. தயாரிப்பாளர்களாக ஏ சுபாஷ்கரன் மற்றும் கருணாமூர்த்தியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

 

Post a Comment