பிரபல ஈரான் திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதியுடன் இணைந்துள்ளார் ஆஸ்கர் விருது பெற்ற இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான்.
உலக சினிமா காதலர்கள் பெரிதும் கொண்டாடும் படம் சில்ரன் ஆப் ஹெவன். ஒரு ஜோடி ஷூக்கள், இரு குழந்தைகள்... இவற்றை மட்டும் மையமாக வைத்தே ஒரு பாசக் காவியம் படைத்தவர் மஜிதி.
அடுத்தடுத்து அவர் இயக்கிய ‘த கலர் ஆப் பாரடைஸ்', த சாங் ஆப் ஸ்பாரோ' படங்கள் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்தன.
கடந்த ஆண்டு மஜித் மஜிதே சென்னைக்கும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட ஒரு சிறந்த இயக்குநருடன் கைகோர்த்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
கடந்த சில மாதங்களாக மஜித் மஜிதி இயக்கி வரும் ஈரானியப் படத்தின் இசையமைப்புப் பணிகளுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் அந்த நாட்டிலேயே தங்கிவிட்டாராம்.
மஜித் மஜிதி படத்துக்கு முழு அர்ப்பணிப்புடன் இசையமைத்த ரஹ்மான், தனக்கு மிகுந்த மனத் திருப்தி தந்த படங்களுள் ஒன்று என அந்தப் படத்தை புகழ்ந்துள்ளார்.
இப்படம் ரிலீஸ் ஆகும் நாளையும் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ரஹ்மான்.
Post a Comment